- Home
- Tamil Nadu News
- வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை! இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை! இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர், பல்லடம், மற்றும் திருச்சி மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் இன்று 5 மாவட்ட பள்ளிகளுக்கும், 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு
ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கரூர்
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பல்லடம்
நாகப்பட்டினம்
குத்தாலம், அரையபுரம், கடலங்குடி, குத்தாலம், திருக்குவளை, ஏழுக்குடி, மணலி உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பல்லடம்
பெரியார்நகர், தீத்தம்பாளையம், தங்கமேடு, செம்மாண்டம்பாளையம், ஜெகதகுரு டெக்ஸ்டைல்ஸ், சேங்காலிபாளையம், தண்ணீர்பந்தல், தெற்கு அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.
திருச்சி
செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முட்டப்புடப்பு, கலாம், உசிலம்பட்டி, பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, அட்மாட் சாலை, பஸ் ஸ்டாண்ட், , ரயில்வே ஸ்டேஷன், அமையாபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி,மஞ்சம்பட்டி, வெங்கைக்குறிச்சி, மராட்டிரெட்டியபட்டிமலையடிப்பட்டி, காரத்துப்பட்டி, பொம்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.