Asianet News TamilAsianet News Tamil

மதுரை சித்திரை திருவிழா.. விண்ணைப்பிளக்கும் ஹர ஹர சிவா கோஷங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.

Chariot show was held on the occasion of Madurai Chithrai festival KAK
Author
First Published Apr 22, 2024, 9:10 AM IST

சித்திரை திருவிழா

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதியோடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  தற்போது திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக  தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 22, 2024, திங்கள் கிழமை...

Chariot show was held on the occasion of Madurai Chithrai festival KAK

மதுரை வீதிகளில் திருத்தேர்

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும்,  சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து  முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்கின்றது. சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது. 

Chariot show was held on the occasion of Madurai Chithrai festival KAK

ஹர ஹர சிவா பக்தி கோஷம்

மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் சங்கு முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று வணங்கிவருகின்றனர். தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் மதுரை மாநகர  காவல்துறை சார்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios