Asianet News TamilAsianet News Tamil

பட்டாவில் பெயர் மாற்றுவது ரொம்ப ஈசி! ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வரும் தானியங்கி முறை!

உட்பிரிவு செய்யவேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கி முறையில் விரைவாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் தனது மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

Changing the name on the patta is very easy! Automatic system effective from June 15 in TamilNadu sgb
Author
First Published Jun 10, 2024, 9:34 PM IST | Last Updated Jun 10, 2024, 10:48 PM IST

தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் வரும் ஜூன் மாதம் 15ஆம்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் கிரையம் கொடுப்பவரும், கிரையம் பெறுபவரும் பயன் அடையலாம். பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் இரு தரப்புக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையில் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

இப்போது இருக்கும் முறையில் வாங்கப்படும் சொத்து தொடர்பான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால், அது பற்றிய தகவல்களை பதிவுத்துறை வருவாய்துறைக்கு தெரிவிக்கும். அதன்படி, உரிய நபருக்கு பட்டா வழங்கப்படும். இந்நிலையில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து கிரையம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிவிக்கப்படும்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் முக்கியப் பொறுப்பு!

உட்பிரிவு செய்யவேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கி முறையில் விரைவாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் தனது மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆவணத் தயாரிப்பின்போது அலுவலர்கள் சில விவரங்களைக் கவனமாகச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபரின் பெயர் உறுதிசெய்யப்பட வேண்டும்.

மாற்றம் செய்யப்படும் சொத்து விவரமும் அளவுகளும் நான்கெல்லைகளும் வருவாய்த்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து, அதன்படி ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். சொத்து வரியின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது, வரிவிதிப்பு பெயர் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்.

இறந்தவர் பெயரில் பட்டா இருந்தால் பட்டாவில் வாரிசுகள் பெயரை சேர்த்து ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற வேண்டும். பட்டா மாறுதல் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சரிபார்துத உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில வரி பகிர்வு நிதி ரூ.1.39 லட்சம் கோடி விடுவிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios