மாநில வரி பகிர்வு நிதி ரூ.1.39 லட்சம் கோடி விடுவிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக ரூ.25,069.88 கோடியைப் பெற்றுள்ளது. 14,056.12 கோடியுடன் பீகார் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 10,970.44 கோடியுடன் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொகையாக ரூ.1.39 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.5,700.44 கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாக ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ரூ.1,39,750 கோடி தொகை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் மாநில அரசுகள் வளர்ச்சி மற்றும் மூலதனச் செலவுகளைத் துரிதப்படுத்த முடியும்.
2024-25 இடைக்கால பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு வரிகளை பகிர்ந்தளிக்க ரூ.12,19,783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்தது. இப்போது வெளியிடப்பட்டுள்ள நிதியைச் சேர்ந்து இன்றுவரை மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2,79,500 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டாவில் பெயர் மாற்றுவது ரொம்ப ஈசி! ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வரும் தானியங்கி முறை!
ஒதுக்கீடுகளின்படி, உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக ரூ.25,069.88 கோடியைப் பெற்றுள்ளது. 14,056.12 கோடியுடன் பீகார் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 10,970.44 கோடியுடன் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த நிதி பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்க மாநிலங்களை அனுமதிக்கும் என நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை மாநிலங்கள் மொத்தம் மூன்று தவணை வரி பகிர்வுகளைப் பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிடம் பணம் இல்லை என்றபதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினார். தேர்தலுக்குப் பின் பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில், புதிய அமைச்சரவையில் மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதல் நடவடிக்கையாக மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியீடு! மோடி 3.0 ஆட்சியில் யாருக்கு முக்கியத்துவம்?