Asianet News TamilAsianet News Tamil

உஷார் !! இன்று தென் தமிழகத்தில் மழை.. தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Chance of moderate rain in South Tamil Nadu today
Author
First Published Sep 9, 2022, 2:54 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

09.09.2022 மற்றும்‌ 10.09.2022: வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

11.09.2022 முதல்‌ 13.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை.. இந்த புருடா விடுற வேலை எல்லாம் இங்க வேணாம்-மு.க.ஸ்டாலின் கிண்டல்

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:சசிகலாவுடன் ஓபிஎஸ் அணியின் முதல் சந்திப்பு... அதிர்ச்சியில் இபிஎஸ்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

09.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. 

வடக்கு கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. 

கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

10.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

11.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

ஆந்திர கடலோரப்பகுதிகள்‌, மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

12.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:இந்தியா ஒற்றுமை 3 ஆம் நாள் பயணம்.. ராகுலை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்... என்ன பேசினார்கள் தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios