அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 2ஆம் தேதி மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் தொடர் விடுமுறை..! இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்- எந்த எந்த இடங்களுக்கு தெரியுமா.?
செவ்வாய்க்கிழமை இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈக்காட்டுத்தாங்கல், போரூர், கிண்டி, கொளத்தூர், அசோக்நகர், நந்தம்பாக்கம், ஆலந்தூர், வடபழனி ஆகிய இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் வாதிட்ட வழக்கறிஞர்!