முதல்வரின் டெல்லி பயணம் சக்ஸஸ்.. சென்னை மெட்ரோ - 63,246 கோடி நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் சேவையின் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை துவங்க அதற்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதாக, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இப்போது காணலாம்.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகன நெரிசல்களை சரி செய்ய, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. உண்மையில் இந்த மெட்ரோ ரயில் சேவையானது இப்போது பலரது அன்றாட வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது என்றே கூறலாம். சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை பல முக்கிய இடங்களை இந்த மெட்ரோ ரயில் சேவை இணைத்து வருகிறது.
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! காத்திருக்கும் குட் நியூஸ்
அது மட்டும் அல்லாமல் பரங்கி மலையில் இருந்தும் தனியாக ஒரு மெட்ரோ ரயில் (லைன்) சேவை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான மூன்றாவது வழித்தட பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான நிதியை இன்னும் மத்திய அரசு சரியாக ஒதுக்கவில்லை என்று தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தது தமிழக அரசு.
இது தொடர்பாக அண்மையில் முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக டெல்லி சென்று ரயில்வே துறையிடம் பேசி வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தான் சுமார் 63,246 கோடி நிதியை மெட்ரோ ரயில் பணிகளின் இரண்டாம்கட்ட பணிகளுக்காக ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஒரு பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டார் அதில் "பிரதமர் நரேந்திர மோடி உடனான தன்னுடைய கடைசி சந்திப்பின்போது, சென்னை மெட்ரோ சம்மந்தமாக முன்வைத்த தமிழகத்தின் கோரிக்கைகளை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும், தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும். மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முடித்திட ஆவணம் செய்வதாகவும் கூறியிருக்கிறார்" முதல்வர் ஸ்டாலின்.
"துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டு விழா" ஆர்.கே. செல்வமணி வெளியிட்ட கலக்கல் தகவல்!