"துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டு விழா" ஆர்.கே. செல்வமணி வெளியிட்ட கலக்கல் தகவல்!
Udhayanidhi Stalin : முன்னாள் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஞாயிறு அன்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
udhayanidhi stalin
முன்னாள் நடிகரும், தற்போது தமிழகத்தின் அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது சினிமா வாழ்க்கைக்கு பிறகு தான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக களம் இறங்கினார்.
பிரபல "ரெட் ஜெயன்ட் மூவிஸ்" அந்த திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக "ஆதவன்", "மன்மதன் அன்பு", "ஏழாம் அறிவு", "நீர் பறவை", "வணக்கம் சென்னை" மற்றும் "இந்தியன் 2" ஆகிய ஏழு திரைப்படங்களை இதுவரை அவர் தயாரித்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் கடந்த 2010ம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வெளியான சிவக்கார்த்திகேயனின் "மாவீரன்" வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராகவும் செயல்பட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இளையராஜாவை அழவைத்த வாலி; எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் பாட்டு தான்!!
Oru Kal Oru Kannadi
பல திரைப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அவருடைய தயாரிப்பில் வெளியான "ஆதவன்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து கடந்த 2012ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கோலிவுட் உலகின் ஹீரோவாக களமிறங்கினார். நார்வே தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது உதயநிதிக்கு அந்த படத்திற்காக கிடைத்தது. மேலும் FilmFare வழங்கும் அறிமுக நடிகருக்கான விருது, சைமா வழங்கும் அறிமுக நடிகருக்கான விருதும் அந்த ஆண்டு அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Maamannan
தொடர்ச்சியாக இவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "சைகோ" மற்றும் 2023 ஆம் ஆண்டு வெளியான "மாமன்னன்" திரைப்படம் ஆகிய படங்களில் உதயநிதி நடிப்பு வெகுவாக பாராட்டப்பது. கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடித்த "மாமன்னன்" திரைப்படத்தோடு தனது கலை உலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் கூறியிருந்தார்.
Deputy CM
இந்த சூழலில் நான் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். தற்பொழுது தமிழகத்தின் "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை" அமைச்சராகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் தான் தனது நான்காம் ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக அண்மையில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் சினிமா துறையில் சாதித்து தற்பொழுது துணை முதல்வராக உயர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பெப்சி சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதன் தலைவர் ஆர்.கே செல்வமணி அறிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
வாலி முதல் ... நா.முத்துகுமார் வரை; அபூர்வ பறவையின் பெயரை 10 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர்கள்!