பக்தர்களே உஷார்.. மருதமலை கோவிலில் சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அதிர்ச்சி !
Marudhamalai Murugan Temple : மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் முன்பகுதியில் சிறுத்தை கடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மருதமலை பகுதியில் இருந்து தடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் வரை உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இயல்பாக இருக்கும். குறிப்பாக மருதமலை வனப்பகுதியிலும் சிறுத்தைகள் வாடிக்கையாக கடந்து சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் முன்பகுதியில் சிறுத்தை கடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறையினர் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக யானைகள், சிறுத்தைகள் கடந்து செல்ல கூடிய பகுதி தான், மேலும் அங்கு வனத்துறை குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் கடந்துள்ளது. வன குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையை கோவிலில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !
இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம்