Asianet News TamilAsianet News Tamil

Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !

Rajya Sabha Elections 2022 : 2003-04ல் நான் காங்கிரஸில் நான் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

Am I less deserving actress Nagma reacts after being denied Rajya Sabha seat via Twitter post
Author
First Published May 30, 2022, 11:21 AM IST

மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கப்படடாதது குறித்து நடிகையும் மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் 57 எம்.பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடிகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Am I less deserving actress Nagma reacts after being denied Rajya Sabha seat via Twitter post

இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் தேவை ஆகும்.  இதனிடையே, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப்கார்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மராட்டிய காங்கிரசால் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை நக்மா அதிருப்தி

மராட்டியத்தில் இருந்து இம்ரான் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதற்க்கு காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பதிவில், ‘2003-04ல் நான் காங்கிரஸில் நான் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அதன்பிறகு இப்போது 18 வருடங்கள் ஆகிவிட்டபோதும் கூட இன்னும் ஒரு வாய்ப்பை கூட அவர் கண்டுபிடிக்கவில்லை.  ஆனால் மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன குறைவான தகுதியுடையவளா ?' என்று பதிவிட்டுள்ளார். நக்மாவின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை இன்று தொடக்கம்.!

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

Follow Us:
Download App:
  • android
  • ios