போர் அடித்த தமிழ்நாடு போலீஸ்? இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கும் TTF? திருப்பதியில் வழக்கு பதிவு
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் அவர்களிடம் பிரான்க் செய்த டிடிஎப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் ஆரம்ப காலத்தில் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பல பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்கு செல்வதை மட்டும் வீடியோவாக வெளியிட்ட வாசன் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, அசுர வேகத்தில் சீறிப்பாய்வது உள்ளிட்ட நிகழ்வுகளையும் வீடியோவாக வெளியிட்டார்.
இது அவரை பின்தொடரும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறியதைத் தொடர்ந்து அவரை பிரபலங்கள் பலரும் எச்சரித்தனர். இருப்பினும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளாத நிலையில் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது விபத்தில் சிக்கினார். அப்போது அவரை கைது செய்த காவல் துறையினர் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு; கடலூரை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் செல்லும் பொழுது அலட்சியமாக காரை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தற்போது வரை அவரது கார் மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்ச்சை நாயகர் டிடிஎஃப் வாசன் அண்மையில் தனது நண்பர்களுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்றுள்ளார்.
எனக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி மட்டும் தான்; வரலட்சுமியின் கணவர் கலகல பேச்சு
அப்போது அங்கு தரிசனத்திற்காக காக்க வைக்கப்பட்ட பக்தர்களை ஏமாற்றும் வகையில், வாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிடிஎப் வாசன் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது.