சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ் தமிழில் எனக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி மட்டும் தான் தெரியும் என கலகலப்பாக பேசினார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் அண்மையில் தனது நீண்டகால நண்பரான நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நிக்கோலாய் சச்தேவ், வரலட்சுமி சரத்குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நிக்கோலாய் சச்தேவ் பேசுகையில், “வணக்கம் என்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழில் எனக்க தெரிந்தது சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான் விரைவில் தமிழ் கற்றுக் கொள்கிறேன். மும்பை என்னுடைய வீடு கிடையாது. சென்னை தான் என் முதல் வீடு.

அந்த ஹீரோவால் நயன்தாரா - த்ரிஷா இடையே ஏற்பட்ட பிரச்சனை.. இதுக்காகவா பல ஆண்டுகள் பேசாம இருந்தாங்க?

திருமணத்திற்கு பின்னர் வரலட்சுமியின் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கண்டிப்பாக பெயருக்கு பின்னால் உள்ள சரத்குமாரை நீக்க மாட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் அவர் வரலட்சுமி சரத்குமார் என்றே தொடர்ந்து அழைக்கப்படுவார். என்னுடைய பெயருடன் அவர் பெயரை சேர்த்து நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று அழைக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறேன்.

வரலட்சுமிக்கு சினிமா தான் முதல் காதல். நான் இரண்டாவது தான். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். அவர் நாளையில் இருந்து வழக்கம் போல படபிடிப்பிற்கு செல்வார். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இனி அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும்” என்று தெரிவித்தார்.

இன்னைக்கு ஒரு புடி.. பிரபல ஹோட்டல் உணவை ருசி பார்த்த ரஜினிகாந்த்.. அம்பானி திருமணத்தில் இதை பார்த்தீங்களா!

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், “என்னுடைய உயிர் சினிமா தான் என்பது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா என்று பலர் கேட்டிருந்தீர்கள். என் கணவர் பேசியதில் இருந்தே உங்களுக்கு அதற்கான பதில் கிடைத்திருக்கும். நான் தொடர்ந்து நடிப்பேன். நான் என்ன படம் செய்தாலும் அதற்கான பாராட்டை நீங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.