அந்த ஹீரோவால் நயன்தாரா - த்ரிஷா இடையே ஏற்பட்ட பிரச்சனை.. இதுக்காகவா பல ஆண்டுகள் பேசாம இருந்தாங்க?
தற்போது நயன்தாராவும் த்ரிஷாவும் தற்போது நல்ல நண்பர்களாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கும் ஒரு கருத்து வேறுபாட்டால் சில காலம் பேசாமல் இருந்தனர் என்று உங்களுக்கு தெரியுமா?
நயன்தாரா த்ரிஷா இருவருமே தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளாக வலம் வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நடிகைகளும் தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியா சினிமா முழுவதுமே கோலோச்சி வருகின்றனர். தற்போது நயன்தாராவும் த்ரிஷாவும் தற்போது நல்ல நண்பர்களாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கும் ஒரு கருத்து வேறுபாட்டால் சில காலம் பேசாமல் இருந்தனர் என்று உங்களுக்கு தெரியுமா?
Trisha, Nayanthara
ஆம். 2008-ம் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் குருவி படம் வெளியானது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் இறுதியில் த்ரிஷா தான் இந்த படத்தில் தான் நடித்தார். இதனால் தனது வாய்ப்பை த்ரிஷா தட்டி பறித்துவிட்டதாக நயன்தாரா மனஸ்தாபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சில காலம் த்ரிஷாவும் நயன்தாராவும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.
எனினும் இந்த கருத்து வேறுபாட்டை நீக்கி இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர். த்ரிஷா ஒருமுறை இதுகுறித்து பேசிய போது “ நயன் இந்தத் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்.எங்களுக்குள் பிரச்சனை இருந்தது உண்மை தான். ஆனால் எங்களின் பெரும்பாலான பிரச்சினைகள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை. தனிப்பட்ட காரணங்களாலும், பரஸ்பர நண்பர்களாலும் எங்களுக்குள் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது, ஆனால் நாங்கள் ஒருபோதும் சண்டையிடவில்லை,” என்று த்ரிஷா தெரிவித்தார்.
Trisha
நயன்தாராவும் த்ரிஷா உடனான கருத்து வேறுபாடு குறித்து ஒருமுறை பேசினார்.. தவறான புரிதல் காரணமாக இருவரும் நீண்ட காலம் பேசிக்கொள்ளவில்லை. இந்த பிரச்சனையை சரிசெய்யும் உரையாடலைத் த்ரிஷா தொடங்கினார். பின்னர் நாங்கள் இருவரும் பேசி சரிசெய்துவிட்டோம். இருந்தாலும் முதலில் முயற்சி எடுத்த த்ரிஷாவை நான் பாராட்டி ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.
நயன்தாரா, சித்தார்த், ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் தி டெஸ்ட் படத்தில் நடிக்க வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாளப் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்..
த்ரிஷா கடைசியாக தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இந்தி தெலுங்கி உருவாகி வரும் விஸ்வம்பரா என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களில் த்ரிஷ நடித்து வருகிறார். இவை தவிர ஐடெண்டிட்டி, ராம் ஆகிய மலையாள படங்களிலும் த்ரிஷா நடித்து வருகிறார்.