விழுப்புரம் விக்கிரவாண்டியில் சாலை தடுப்பில் கார் மோதி தீப்பிடித்த விபத்தில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை ஆவடி மற்றும் கொளத்தூரை சேர்ந்தவர்கள் சம்சுதின், ரிஷி மற்றும் மோகன். நண்பர்களான இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 5 பேர் கேரள மாநிலம் மூணாருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி சென்னையில் இருந்து காரில் புறபப்ட்டு சென்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள காட்டன் மில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதியது.

தீப்பிடித்து எரிந்த கார்; 3 பேர் பலி

அத்துடன் மோதிய வேகத்தில் முன்னாள் சென்ற லாரி மோது மோதி நின்றது. இதனைத் தொடர்ந்து அந்த கார் உடனே தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனாலும் காரில் இருந்த சம்சுதின், ரிஷி மற்றும் மோகன் ஆகிய 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த அப்துல் அஜீஸ் மற்றும் தீபக் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற நண்பர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.