Omni Bus Accident: ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதியதில், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிகவேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆழ்ந்த துக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் லாரி கூச்சலிட்டனர்.

15 பயணிகள் காயம்

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 பயணிகள் காயமடைந்து வலியால் துடித்தனர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து கிரேன் மூலம் மீட்பு

பின்னர் விபத்துக்குள்ளான பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.