- Home
- Tamil Nadu News
- காரியம் முடிந்ததும் வேலையை காட்டிய காதலன்! காதலியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி! இறுதியில் நடந்தது என்ன?
காரியம் முடிந்ததும் வேலையை காட்டிய காதலன்! காதலியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி! இறுதியில் நடந்தது என்ன?
Chennai Love Couple: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்துச் சென்ற நிரூபன் என்ற இளைஞர், அங்கு தனது நண்பருடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த அப்பெண் மீது தாக்குதல்.

காதல் சொல்லி ஏமாற்றும் இளைஞர்கள்
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்களை சீரழிக்கும் சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் காதலிக்கும் போது காதலியை தாங்கு தாங்கு என்று தாங்குவது போல் நடிப்பார்கள். பின்னர் வேலை முடிந்ததும் கழற்றிவிட்டு விடுவார்கள். சில ஆண்கள் காதலியை வேறுஒருவருக்கு விருந்தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
காதல் ஜோடி
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவருக்கும் வேளச்சேரி பகுதியில் உள்ள பிரபல மாலில் வேலை செய்யும் நிரூபன் (29) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி மணிக்கணக்கில் பேசி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
கெஸ்ட் ஹவுசில்
இந்நிலையில் வார இறுதிநாளை கொண்டாடவும் ஜாலியாக இருக்கவும் புதுச்சேரிக்கு செல்லலாம் என்று நிரூபன் அந்த பெண்ணிடம் கூறினார். காதலனை நம்பி அந்த பெண்ணும் புதுச்சேரிக்கு சென்றார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், ஆரோவில் பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் அறை எடுத்து தங்குவதற்கு சென்றனர். அப்போது தனது நண்பருடன் உல்லாசமாக இருக்குமாறு நிரூபன் அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு மறுத்து காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காதலன் கைது
இதனால் ஆத்திரமடைந்த நிரூபன் அந்த பெண்ணை தரக்குறைவாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து நிரூபனை தீவிரமாக தே வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த நிரூபனை ஆரோவில் போலீஸ் கைது செய்தனர்.