Asianet News TamilAsianet News Tamil

M K Stalin Camel: முதல்வருக்கு பரிசளித்த ஒட்டகத்தின் கதி இதுதானா! விலங்கின ஆர்வலர்கள் கவலை

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட ஒட்டகம் சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Camel gifted to CM M K Stalin now at rescue shelter in Chennai's Uthukottai
Author
First Published Mar 4, 2023, 10:09 AM IST

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஒட்டகம் தற்போது ஊத்துக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் உள்ளது.

கடந்த புதன்கிழமை, மார்ச் 1ஆம் தேதி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு சென்னையில் அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தினர். இந்த விழாவில் திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜாகிர் ஷா முதல்வர் ஸ்டாலினுக்கு ஒட்டகம் ஒன்றை பரிசாக அளித்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்கெட்ச்? அவரது உதவியாளர் அதிரடி கைது!

இரண்டு வயது நிரம்பிய அந்த ஒட்டகத்துக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற சால்வை போர்த்தப்பட்டு முதல்வருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த ஒட்டகம் உடனடியாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், பூங்காவில் ஒட்டகத்துக்குத் தேவையான வசதிகள் இல்லை என்பதால் அதனை அங்கு தங்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

Camel gifted to CM M K Stalin now at rescue shelter in Chennai's Uthukottai

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் (TANUVAS) போதிய வசதிகள் இல்லாததால் ஒட்டகத்தை பூங்காவில் ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதனால் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (People For Animals) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. காப்பகத்தில் ஒட்டகம் நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறது.

6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம்

இதனிடையே, இந்த ஒட்டகம் சட்டப்பூர்வமாக மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்த விசாரணை இன்னும் தொடங்கவில்லை. "மாடு, ஆடு போன்று ஒட்டகங்களும் வளர்ப்பு பிராணிகள். இது வனவிலங்கு அல்ல, எனவே இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது" என்று சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு காப்பாளர் பிரசாந்த் கூறுகிறார்.

"ஒட்டகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை அல்ல. ராஜஸ்தானில் இங்கிருப்பதைவிட் வித்தியாசமாக தட்பவெப்ப நிலையில் அவை வாழும். வானிலை மாற்றம் ஒட்டகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜஸ்தானில் ஒட்டகத்தை ஏற்றுமதி செய்யவோ, கடத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மாநிலத்திற்கு வெளியே உள்ளது. ஒட்டகம் எங்கிருந்து வந்தது என்பது சந்தேகத்திற்குரியது. அதைப்பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊத்துக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் ஏற்கனவே இரண்டு ஒட்டகங்கள் இருப்பதால், ஒட்டகத்தை அங்கே அனுப்புவது நல்லது" என்று விலங்கு ஆர்வலர் அருண் பிரசன்னா கூறினார்.

ஆளுநரின் அலட்சியத்தால் அநியாகமாக பறிபோகும் உயிர்கள்... ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை!

Follow Us:
Download App:
  • android
  • ios