3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிதிருச்சிஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
Tamil News Live Updates: ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் !!

20 நிமிட ஓய்வுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார் பிரதமர் மோடி.
ஶ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு சீதனம் எடுத்து செல்லும் பிரதமர் மோடி - என்ன சீதனம்?
10 விஷ்ணு அவதாரங்கள்.. ராமர் சிலையின் எடை? உயரம் என்ன? ராமர் சிலை பற்றி ஆச்சர்ய தகவல்கள்!
அயோத்திராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமர் சிலையின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அயோத்தி ராமர் கோவில்: சேதமடைந்த தேசிய உணர்வின் மறுமலர்ச்சி.. சத்குரு உரை.!!
ராமர் கோவில் கட்டுவது, சேதமடைந்த தேசிய உணர்வின் மறுமலர்ச்சி என்று சத்குரு கூறினார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இந்திய நாடே முழுவதும் ஒன்றிணைந்து வரவேற்கிறது.
ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!
பிரதமர் மோடி இன்று காலை திருச்சிஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பிறகு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்.!!
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேரலையில் காண : https://www.youtube.com/watch?v=LmGih9FwtNk
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
20 நிமிட ஓய்வுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார் பிரதமர் மோடி
திருச்சி டூ ராமேஸ்வரம் பயணம்
திருச்சி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் தரிசனத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றார்.
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க வந்த பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர்.
விபீஷணன் - இலங்கை - ஸ்ரீரங்கம்.. ஸ்ரீராமரால் வழிபட்ட கடவுளை வணங்கிய பிரதமர் மோடி - இந்த வரலாறு தெரியுமா?
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்குபிரதமர் நரேந்திர மோடியின் வருகை மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஸ்ரீரங்கத்துக்கும், விபீஷணனுக்கும் இடையே உள்ள தொடர்பு பலருக்கும் தெரிவதில்லை.
எதுக்கு தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? ஆளுங்கட்சியை விளாசும் டிடிவி.தினகரன்..!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை.. ஒருத்தரையும் சும்மாவிடக்கூடாது.. கொந்தளிக்கும் ராமதாஸ்.!
மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் - மெர்லின் ஆகியோர் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிக வேகம்.. சூப்பரான மைலேஜ்.. பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?
பிஎம்டபிள்யூ தனது சிஇ 02 (BMW CE 02) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு வெளியிட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு - இணையத்தில் வைரல்.. உண்மையா? பொய்யா? முழு விபரம் இதோ!
அயோத்திராமர் கோவில்கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். அப்போது தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர்.

நுகர்வோர் சேவை மதிப்பீடு.. Powerthon 20240-ஐ அறிமுகப்படுத்திய மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் !
மத்திய மின்துறை அமைச்சர்ஆர்.கே. சிங் ஆர்பிஎம் (RPM) கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நுகர்வோர் சேவை மதிப்பீடுகள் மற்றும் Powerthon 2024 ஐ அறிமுகப்படுத்தினார்.
பி.எப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனிமேல் இது செல்லாது.. உடனே தெரிஞ்சுக்கோங்க..
இ.பி.எப்.ஓ தற்போது மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனை பி.எப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
அட வேற லெவல் போங்க.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பட்டுவேட்டியுடன் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பட்டுவேட்டி கட்டி வந்து மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
பொது மக்களை பார்த்து கையசைத்தபடி சென்ற பிரதமர் மோடி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கார் மூலம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.. 40 தமிழக மீனவர்கள் விடுதலை
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.