MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!

Premalatha Vijayakanth Criticizes DMK: சேலம் மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 16 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சேலத்தில் நடந்த பிரச்சாரம்
Image Credit : Asianet News

சேலத்தில் நடந்த பிரச்சாரம்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் பிரச்சாரங்களும் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

26
திமுக மீதான குற்றச்சாட்டு:
Image Credit : Asianet News

திமுக மீதான குற்றச்சாட்டு:

இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் திமுக மீது சுமத்தும் ஒரே குற்றச்சாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், போதைப்பொருள் பயன்பாடும் என இந்த கருத்தை ஆதரிப்பது போல் இவர் பேசியது தான் அங்கு சலசலப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

36
பெண்கள் பாதுகாப்பு:
Image Credit : Asianet News

பெண்கள் பாதுகாப்பு:

மேலும் தற்போது திமுக கூட்டணியின் வலது கரமாக அண்ணனுக்கு தேமுதிக உள்ளது, எனவே பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதனை அவரது தங்கையாக நான் தட்டிக்கேட்பேன். எல்லா இடங்களிலும் சிசிடிவி நிறுவி பெண்களின் பாதுகாப்பை செய்ய சொன்னால், அண்ணன் உருவாக்கி தருவார் என கூறினார். அதே போல் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எந்த ஒரு அரசுக்கும் சவால்தான், தமிழகத்தில் கண்டிப்பாக போதைப்பொருள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

46
விஜய் மீது விமர்சனம்:
Image Credit : Google

விஜய் மீது விமர்சனம்:

அதே போல் நடிகர் விஜயின் அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரேமலதா, அரசியல் என்பது அனுபவமும் பொறுப்புணர்வும் தேவைப்படும் தளம்; புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார். வெறும் பிரபலத்தன்மை மட்டும் அரசியலில் வெற்றி பெற போதாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

56
வெளிப்பட்ட நம்பிக்கை:
Image Credit : Asianet News

வெளிப்பட்ட நம்பிக்கை:

அதே நேரத்தில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அவர், வரும் தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற உறுதியுடன் அவர் பேசியது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

66
புதிய திருப்பம்:
Image Credit : Asianet News

புதிய திருப்பம்:

சேலத்தில் நடைபெற்ற இந்த கூட்டம், தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், கூட்டணியில் இருந்தாலும் திமுகவின் தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது தான். இவரது இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறையை அரசியல் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
Recommended image2
தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு? முதல்வர் கடுமையாக எதிர்ப்பது ஏன்? தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!
Recommended image3
விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலி மீது வழக்கு பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved