Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் பாஜக தொகுதி பங்கீடு விவரம் வெளியீடு; 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி!

வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை பாஜக அறிவித்துள்ளது.

BJP releases seat sharing details of 39 constituencies in Tamil Nadu sgb
Author
First Published Mar 21, 2024, 10:25 PM IST

வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை பாஜக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 9 பேரின் பட்டியல் வெளியான நிலையில், இப்போது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சியின் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மேலும் 10 வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோவை தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்! சுற்றுப்பயணத் தேதிகள் அறிவிப்பு!

நெல்லை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரனும் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறி்விக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் தென்சென்னை தொகுதியில் இருந்து போட்டி போடுகிறார்.

மத்திய சென்னையில் பி. செல்வம் போட்டியிடவுள்ளார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியிலும், டி.ஆர்.பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே வேட்பாளர்களாகக் களமிறங்க உள்ளனர்.

Arvind Kejriwal Arrest: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Follow Us:
Download App:
  • android
  • ios