எஸ்பி வேலுமணியின் மகன் திருமண விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றார். 

SP Velumani Son's marriage: அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கும், மணமகள் C.T. தீக்ஷனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

எஸ்பி வேலுமணி மகன் திருமணத்தில் அண்ணாமலை:

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ''இன்றைய தினம் தமிழக எதிர்க்கட்சி சட்டமன்றக் கொறடாவும், அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான, அண்ணன் எஸ்பி வேலுமணியின் மகன், செல்வன் V.விஜய் விகாஸ், மணமகள் செல்வி C.T. தீக்ஷனா ஆகியோரின் திருமண விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருடன் கலந்து கொண்டது மிகவும மகிழ்ச்சி அளிக்கிறது. மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

பாஜக டூ திமுக.! பல்டி அடித்த முக்கிய நிர்வாகி- அண்ணாமலைக்கு ஷாக்

எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடிகர் விஷால்

எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடிகர் விஷாலும் கலந்து கொண்டார். இதேபோல் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் எஸ்பி வேலுமணி மகனின் திருமண விழாவில் பங்கேற்றனர். தமிழக அரசியல் களத்தில் இப்போது பாஜகவும், அதிமுகவும் எதிரும் புதிருமாக உள்ளது. இந்த சூழலில் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டிருப்பது அர்சியலில் பேசும்பொருளாகியுள்ளது.

ஏனெனில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே சென்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பது இல்லை எனவும் அதிமுகவும், பாஜகவும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இழுக்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. 

அமித் ஷாவை சந்தித்த எஸ்பி வேலுமணி:

அண்மையில் தமிழ்நாடு வந்த அமித்ஷா, அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும்படி தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு அறிவிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிமுகவுடன் மீண்டும் நெருக்கம் காட்ட பாஜக தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. எஸ் பி வேலுமணியை பொறுத்தவரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து பெரிய செல்வாக்கு உள்ளவர். ஆகவே அவரை வைத்து அதிமுக பாஜக கூட்டணி கணக்கு போட பாஜவினர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்பாடா; நிம்மதி பெரு மூச்சு விட்ட சீமான்.! உச்சநீதிமன்றம் கொடுத்த குட் நியூஸ்