Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியிருந்தாலும் ஜெயிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழ்நாட்டிலேயே குடியிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக ஜெயிக்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

BJP cannot win a single seat in Tamil Nadu says Udayanidhi Stalin in Salem sgb
Author
First Published Apr 7, 2024, 8:24 PM IST

பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியிருந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் 39 தொகுதிகளில் ஜெயித்ததைப் போல, இந்த முறை 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை ஓமலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

ஓமலூர் பஸ் நிலையத்தில் பரப்புரை செய்தபோது உதயநிதி பேசியதாவது:

"இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பார்த்து அண்டை மாநிலமான கர்நாடகா, தெலுங்கனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஜெயலலிதா மகள் என்பதால் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்: ஜெயலட்சுமி

BJP cannot win a single seat in Tamil Nadu says Udayanidhi Stalin in Salem sgb

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே பிரதமர் அடிக்கடி வருகிறார். வரட்டும் நான் எதுவும் சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இல்லை, அடுத்த 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் வரையிலும் தமிழகத்திலேயே அவர் குடியிருந்தாலும் ஒரு தொகுதியில்கூட பாஜக ஜெயிக்க முடியாது.

2019ஆம் ஆண்டில் எப்படி 39 தொகுதிகளில் ஜெயித்தோமோ அதேபோல், இந்த முறை 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, எப்போதும் ஏன் செங்கலை காட்டுகிறேன் என்று கேட்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரையில் நான் அந்தச் செங்கலை கொடுக்கமாட்டேன். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார்.

அவருக்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியம் இல்லை, யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா?"

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

வெயிலில் வாடி வதங்கும் மக்களுக்கு குட் நியூஸ்... அடுத்த 6 நாட்களில் கோடை மழைக்கு வாய்ப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios