நீலகிரி

நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்குள் அடிக்கடி நுழையும் காட்டெருமைகளைக் கண்டு சுற்றுலாப் பயனிகள் அலறியடித்து ஓடுகின்றனர். இதனால் பெரும் பீதியில் உள்ள சுற்றுலாப் பயனிகள் மற்றும் பொதுமக்கள் காட்டெருமைகள் பூங்காவுக்குள் புகுவதை தடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விடுமோ என்றும் பூங்காவின் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, காட்டெருமை தாவரவியல்  பூங்காவுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் பூங்காவை சுற்றி கான்கிரீர் பாதுகாப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள்  மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.