நீதிபதி கவிதா காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்ததுடன், பத்ரி சேஷாத்ரியை நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி குன்னம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அண்மையில் எழுத்தாளரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்துவிட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
தீயில் கருகிய கிடார், தபேலா... இசையால் ஒழுக்கக்கேடு ஏற்படுமாம்! இசைக்கருவிகளைக் கொளுத்தும் தாலிபான்!
பத்ரி சேஷாத்ரியின் பேட்டி குறித்து பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜூலை 29ஆம் தேதி பத்ரி சேஷாத்ரியை கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழ்நாடு காவல்துறை மனுத்தாக்கல் செய்தது. பத்ரி சேஷாத்ரி தரப்பில் ஜாமீன் கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி கவிதா காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்ததுடன், பத்ரி சேஷாத்ரியை நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். இன்று எழுத்தாளர்கள் அம்பை, பால் சக்கரியா, பெருமாள்முருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம், ராஜன் குறை கிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோர் இணைந்து கூட்டாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்யக் கோரியுள்ளனர்.
இன்று இரவு பூமிக்கு மிக அருகில் வரும் நீல நிலா! ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை தோன்றும் 'சூப்பர் மூன்'!