தீயில் கருகிய கிடார், தபேலா... இசையால் ஒழுக்கக்கேடு ஏற்படுமாம்! இசைக்கருவிகளைக் கொளுத்தும் தாலிபான்!
இசையால் ஒழுக்கச் சீர்கேடு ஏற்படும் என்று கூறி தாலிபான்கள் இசைக் கருவிகளை எரிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தாலிபான்கள் கிடார், தபேலா மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல இசை உபகரணங்களை ஒழுக்கக்கேடுக்கு வழிவகுப்பை என்று கருதி தீ வைத்து எரித்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
சனிக்கிழமையன்று வெளியான புகைப்படங்களில் விலை உயர்ந்த இசைக்கருவிகறை தாலிபான்கள் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அவற்றில் பெரும்பாலானவை நகரத்தில் உள்ள திருமண மண்டபங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!
ஹெராத் மாகாணத்தில் அந்நாட்டு அதிகாரிகள் இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து எரித்தனர் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு கிட்டார், மேலும் இரண்டு தந்தி இசைக்கருவிகள், ஒரு ஹார்மோனியம், ஒரு தபேலா, ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இருப்பதைக் காணமுடிகிறது.
"இசையை ஊக்குவிப்பது ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இசைக்கருவிகளை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" என்று தாலிபான்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் 2021இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தாலிபான்கள் பொது இடங்களில் இசையை இசைப்பதற்குத் தடை செய்வதாக அறிவித்தனர். இசை இஸ்லாமுக்கு எதிரானது என்றும் தாலிபான்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழிய ஆட்சியில் ஏராளமான கெடுபிடியான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது. உயர்கல்வி நிலையங்களில் சேரக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெண்கள் பியூட்டி பார்லர் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த பியூட்டி பார்லர்களும் மூடப்பட்டுள்ளன.