மீண்டும் முதல்வரின் செயலாளரானார் அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்... யார் இவர்?
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளராக இருந்த அனு ஜார்ஜ் இடையில் விடுமுறையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளராக இருந்த அனு ஜார்ஜ் இடையில் விடுமுறையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் பணியில் இணைந்துள்ளார். முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்து வந்தனர். இந்த 4 அதிகாரிகளுக்கும் அரசின் மிக முக்கியமான 45 துறைகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் முதல்வரின் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். இதனிடையே 4 அதிகாரிகளில் ஒருவரான அனு ஜார்ஜ், கடந்த ஜனவரி மாதம் நீண்ட விடுமுறை எடுத்தார். இதனால் அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மற்ற மூவருக்கும் பிரித்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில், விடுமுறை முடிந்து அனு ஜார்ஜ் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இதை அடுத்து அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மீண்டும் அவருக்கே ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? தன் மீதான புகாரை வாபஸ் பெற்றது குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்!!
யார் இந்த அனு ஜார்ஜ்?
கடந்த 2011-2012 ஆம் ஆண்டு வரை அரியலூர் ஆட்சியராக பணியாற்றிய அனு ஜார்ஜ், அப்போதைய அதிமுக எம்எல்ஏ துரைமணிவேல், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்தது குறித்து அறிந்தவுடன் தகுதியான நபர்களுக்கு அன்று நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பணி ஆணை வழங்கியதோடு அடுத்த நாளே பணியில் சேர உத்தரவிட்டார். இதனால் கடுப்பான துரைமணிவேல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனு ஜார்ஜை டிரான்ஸ்ஃபர் செய்ய வைத்தார். இதனால் அனு ஜார்ஜ் தொழில்துறை ஆணையரானார். அப்போது அனு ஜார்ஜை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனு ஜார்ஜ் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை, செய்த விதம் அனைவரையும் ஈர்த்ததை அடுத்து அனு ஜார்ஜை மு.க.ஸ்டாலின் தனி செயலாளர்களாக நியமித்திருந்தார்.
இதையும் படிங்க: 43வது ஆண்டில் பாஜக… நாட்டின் மிகப்பெரிய கட்சியானது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!
அனு ஜார்ஜ் கவனித்து வந்த 12 துறைகள்:
சுற்றுச்சூழல், பிற்படுத்தப்பட்டோர் நலம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, சமூக நலன், ஆதிதிராவிடர்-பழங்குடியினர், சுற்றுலா, கால்நடை-மீன்வளம்-பால்வளம், கைத்தறி, சமூக மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட துறைகளோடு முதல்வர் ஸ்டாலினின் அப்பாயிண்ட்மென்ட்டுகளையும் அனு ஜார்ஜ் கவனித்து வருகிறார்.