ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? தன் மீதான புகாரை வாபஸ் பெற்றது குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்!!
தன் மீது அண்ணாமலை ஆதரவாளர்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்றதை சுட்டிகாட்டி அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.
தன் மீது அண்ணாமலை ஆதரவாளர்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்றதை சுட்டிகாட்டி அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். அன்மைகாலமாக, அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்து வருகிறார். அந்த வகையில்,2ஜி ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும், முந்தைய திமுக ஆட்சி பற்றி அனைவருக்கும் தெரியும். இப்போது ஏன் கதையை மாற்றுகிறீர்கள்? ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக மற்றும் அனைவரின் சொத்து ஊழல் பட்டியலை கொடுக்க போகிறீர்கள். அது தான் உங்கள் கதை. பிஜிஆர் ஊழல், ஜி ஸ்கொயர் ஊழல் வெளியிடுவீர்களா? அனைத்துக் கட்சி தலைவரின் சொத்து ஊழல் பட்டியலையும் சேர்த்து வெளியிடுவீர்களா?
இதையும் படிங்க: 43வது ஆண்டில் பாஜக… நாட்டின் மிகப்பெரிய கட்சியானது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!
மோசடிகள் ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாப் போன்றவையும் பற்றி அம்பலப்படுத்து. அதானி பற்றி ராகுல் காந்தியின் சமீபத்திய கேள்வி உட்பட வெளியிடுவீர்களா? உன் டகால்டி வேலையை காட்டாதே என்று ஒருமையில் விமர்சித்திருந்தாட். இதை அடுத்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அண்ணாமலை கேட்டுக்கொண்டதற்கிணங்க புகார் வாபஸ் பெறப்பட்டது. இதையும் விமர்சித்து காயத்ரி ரகுராம் டிவீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம்..! அழைப்பு விடுத்த வேல்முருகன்
அவரது டிவிட்டர் பதிவில், அண்ணாமலை, கால் முன்னோக்கி அல்லது பின்னோக்கி வைக்க வேண்டாம். தயவு செய்து ஒரு முடிவுக்கு வாருங்க. அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான். ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள். கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.