அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 5 மாதங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு. குற்றவாளி கைது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Anna University student Paliyal case verdict today : அண்ணா பல்கலைகழக மாணவிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கல் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த 5 மாதங்களாக வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த 5 மாத காலத்தில் மாணவி புகார் முதல் தீர்ப்பு வரை என்ன நடைபெற்றது என்பதை தற்போது பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு- நடந்தது என்ன.?

  • டிசம்பர் 23 - அண்ணா பல்கலைகழக வளாகத்தில் ஆண் நண்பரோடு பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை
  • டிசம்பர் 24- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
  • டிசம்பர் 24- புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர்
  • டிசம்பர் 24- மாணவி வாக்குமூலமாக கொடுத்த எப்ஐஆர் வெளியானது- அரசியல் கட்சிகள் கண்டனம், போராட்டம்
  • டிசம்பர் 28 ம் தேதி - பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • ஜனவரி மாதம் 5 ஆம் தேதி - ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு
  • மாணவி பாலியல் கொடுமை நடந்த அன்று குற்றவாளி ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாக எப்ஐஆரில் தகவல்
  • 'யார் அந்த சார்?’ என்னும் கேள்வி- திமுக அரசிற்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம்
  • பிப்ரவரி 24 ம் தேதி- சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
  • மார்ச் 7 ம் தேதி - இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
  • ஏப்ரல் 8 ம் தேதி - தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனு
  • ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த தள்ளுபடி செய்து உத்தரவு

  • பாலியல் வன்கொடுமை, ஆதராங்களை அழித்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது என 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.
  • சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
  • காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
  • மே 20ஆம் தேதி- வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்தது. இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர்
  • மே 28ஆம் தேதி - அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தீர்ப்பு