அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் நவீனத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார். 

சென்னை லயோலா கல்லூரியில் தேசிய அறிவியல் தொழில்நுட்பக் குழுமம், மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற கருந்தரங்கைத்தை தொடங்கி வைத்து , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றமைக்கப்பட உள்ள பாடத்திட்டம், தற்போதை தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வடிமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு ! 6 முதல் 9 பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !

இந்த குழுவில் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சி பணி அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள் என 90 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் பாடங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என்றார்.மேலும் மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக, மாநில அளவில் கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். மேலும் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க: தனித்தேர்வர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு... அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தின் சூப்பர் அறிவிப்பு!!

உக்ரைன் - ரஷ்யா போரினால் அங்கி சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்பட்ட நிலையில், தற்போது உக்ரைனில் இருந்துநாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்விப் பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..திருசெந்தூர் கோவிலில் சாமி தரிசன கட்டணம் ரத்து.. இன்று முதல் அமல்.. முழு விவரம்..