அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மே 17 முதல் 25 வரை சென்னையில் உள்ள 23 கிளைகளில் சிறப்பு உணவு திருவிழாவை நடத்துகிறது. செட்டிநாடு உணவுகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இந்த விழாவில், சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.
செட்டிநாடு பாரம்பரிய உணவுக்கு அடையாளமாக விளங்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பத்து நாள் சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உணவு திருவிழாவில் செட்டிநாட்டு உணவின் செழிப்பையும், நம் முன்னோர்களின் பாரம்பரிய சுவையையும் இன்றைய இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்த செட்டிநாட்டு பாரம்ப உணவு திருவிழா. அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் நிறுவனர் அஞ்சப்பர் ஐயா அவர்களின் கைமணமும், செட்டிநாடு சமையல் கலைவாரிசுகளின் பாரம்பரியமும், இந்த விழாவில் பிரதிபலித்துள்ளது.
பாரம்பரிய செட்டிநாடு உணவு:
10 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா மே 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை முழுவதிலும் உள்ள 23 அஞ்சப்பர் கிளைகளில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மதியம் மற்றும் இரவு உணவுக்காக அயிரமீன் குழம்பு , காணாடு காத்தான் கறி பிரட்டல் , வெடக்கோழி தொடை வறுவல், ஐயா ஸ்பெஷல் கலக்கி , காஸுபரோட்டா, சிகப்பு/கருப்பு கவுணி அரிசி, புளி மண்டி, சதை நண்டு பொடிமாஸ், நெய் கத்திரிக்காய், வெள்ளை பணியாரம், ரோஜாப்பூ துவையல் மற்றும் பல பரம்பரிய உணவுகள் சிறப்பு உணவுகளாக தனது வாடிக்கையாளர்களுக்கு பிரித்தியோகமாக வழங்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கோலாகலமான தொடக்கம்:
அஞ்சப்பர் செட்டிநாடு பாரம்பரிய உணவு திருவிழாவின் முதல் நாள் துவக்கம் சென்னை போரூரில் உள்ள அஞ்சப்டர் செட்டிநாடு உணவகத்தில் கோலாகலமாக துவங்கியது.
இவ்விழாவின் துவக்கத்தில் அஞ்சப்பர் செட்டி நாடு உணவகத்தின் உரிமையாளர்கள் கந்தசாமி , இந்திரா கந்தசாமி மருதுபாண்டியன், சங்கீதா மருதுபாண்டியன், அனு மற்றும் சமையல் வல்லுநர்கள் மால்குடி சுவிதா , பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
