பள்ளிக் குழந்தையை முட்டி தள்ளிய மாடு..! சென்னையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான்  குழந்தையை மாடுகள் தாக்குவதும் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

Anbumani said that strict action is needed to control cattle in Chennai

பள்ளி குழந்தையை முட்டி தள்ளிய மாடு

சென்னை அரும்பாக்கம் அருகே பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டி காயப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை  முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள்.  பள்ளி சென்று திரும்பிய  குழந்தை  வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை  விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சாலை விபத்து

 பள்ளிக்குழந்தை  முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும்  கால்நடைகள்  திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும். சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது.  

Anbumani said that strict action is needed to control cattle in Chennai

தமிழக அரசு- கட்டுப்பாடுகள் தேவை

கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான்  பார்க்க வேண்டியுள்ளது.  அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு  தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னையில் பயங்கரம்; தெருவில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு; அதிர வைக்கும் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios