நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அரியலூரில் நிஷாந்தி என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நாளை நாடு முழுவதும் நீட் நடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!
அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள். இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.
அதே நேரத்தில் நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !
