பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 14ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் டெல்லி வரை சென்றும் தீர்ந்தபாடில்லை. டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தலையிட்டும் இந்த பிரச்சினையில் முடிவு எட்டப்படவில்லை. தற்போது வரை இரு தரப்பும் கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறதாகக் கூறி உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் பாமக அங்கீகாரம் இழந்த நிலையில் இந்த பிரச்சினையில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது இரு தரப்பும் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். மாறாக இரு தரப்பும் உரிமை கொண்டாடும் பட்சத்தில் சின்னம் முடக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பகீர் கிளப்பி உள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் டிசம்பர் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என மருத்துவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகின்ற 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் 20ம் தேதி சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
சென்னை கிழக்க கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகியிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


