Asianet News TamilAsianet News Tamil

அரசு பஸ்ஸில் போலீசாரால் தென்காசிக்கு அழைத்து செல்லப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி..! காரணம் என்ன.?

தென்காசி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அழைத்துச் செல்லப்பட்டார்.

Amarprasad Reddy was taken by the police to be produced in Ambasamudram court KAK
Author
First Published Nov 3, 2023, 8:13 AM IST | Last Updated Nov 3, 2023, 10:04 AM IST

அமர் பிரசாத் கைது

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலது கரமாக இருப்பவர் அமர்பிரசாத் ரெட்டி, கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பனையூரில் அண்ணாமலை வீட்டிற்கு முன்பாக பாஜக கொடி கம்பம் நடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் முடிவு செய்து ஜேசிபி வாகனம் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அமர் பிரசாத் சிறையில் இருந்து வெளியில் வர முடியாத படி அடுத்தடுத்து வழக்குள் பாய்ந்தது.

Amarprasad Reddy was taken by the police to be produced in Ambasamudram court KAK

அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்

இதனால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து அமர் பிரசாத் மனைவி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தால். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமர் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முயன்று வருவதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத்தை போலீசார் தென்காசிக்கு அரசு பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர்.  

Amarprasad Reddy was taken by the police to be produced in Ambasamudram court KAK

அரசு பேருந்தில் அழைத்து சென்ற போலீசார்

தென்காசி ஆழ்வார்குறிச்சியில் அமர் பிரசாத் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில்  அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து  பொதுமக்கள் பயணம் செய்யும் எஸ்சிடிசி பேருந்தில் போலீசார் அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இன்று மாலையே மீண்டும் அமர் பிரசாத் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார். 

இதையும் படியுங்கள்

சூர்யா சிவாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு: அண்ணாமலை அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios