Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu School Holiday: வெளியாக போகும் குட் நியூஸ்! பள்ளிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில்  20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

All saturdays Schools Holiday... school education department announcement Soon tvk
Author
First Published Aug 8, 2024, 2:27 PM IST | Last Updated Aug 8, 2024, 2:31 PM IST

வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில்  20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொன்ன நம்பமாட்டீங்க! பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடனுதவி! மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்!

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

வங்கி ஊழியர்களுக்கு கூட அனைத்து ஞாயிறு விடுமுறையுடன் கூட ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பன்நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு 219 நாட்களாக பள்ளி கல்வித்துறை உயர்த்தியுள்ளது. 

பள்ளி கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் மீது மட்டும் ஏன் இந்த கடும் கோபம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள் பள்ளி கல்வித்துறைக்கு இயக்குநராக பொறுப்பேற்ற பின்பும் மேற்கூறிய இந்த அநீதிகள் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுவதை எங்களால் ஏற்க இயலாது என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்

ஆகவே தாங்கள் உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம். இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு வேண்டுகிறோம். 

இதையும் படிங்க:  Tamil Pudhalvan : மாணவர்கள் வங்கி கணக்கில் நாளைய தினமே 1000 ரூபாய்.! அதிரடியாக வெளியான அறிவிப்பு

அதன் அடிப்படையில் இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும் அதைப்போன்றே ஆகஸ்ட் 24ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதாலும் இம்மாதத்தில் இந்த இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முக்கிற அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios