சொன்ன நம்பமாட்டீங்க! பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடனுதவி! மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்!
சொந்த தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மத்திய அரசு கடன் உதவி வழங்கி வருகிறது.
business
ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்போது பெண்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் தான் ஸ்டாண்ட் அப் இந்தியா.
business
கடந்த 2016ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த திட்டம். அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வகையில், ஊக்குவிக்கும் விதமாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது.
business
ஸ்டாண்ட அப் இந்தியா திட்டத்தின் வாயிலாக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மத்திய அரசு கடன் வழங்கி வருகிறது. இதன் மூலமாக சிறு தொழில்கள் துவங்கி தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இந்த திட்டம் அதிக அளவில் பயன் பெறுகிறது.
business
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு நல்ல ஊக்கமாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் உள்ளது. இதற்காக 2.64 லட்சம் பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 2.41 லட்சம் பேருக்கு ரூ.54,698 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க விரும்பும் பெண்கள் தங்கள் சொந்த தொழிலுக்காக 10-15 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.
business
இத்திட்டத்திற்கு தேவையான மீதி பணத்தை அரசே கடனாக வழங்கும். இதனை திருப்பி செலுத்துவதற்கு 18 மாதங்கள் வரை தடை காலம் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெறுவதற்கான வயது வரம்பு 18ஆக இருக்க வேண்டும். கடந்த கடன் வாங்கி ஒழுங்காக திருப்பி செலுத்தாதவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக கடன் பெற முடியாது. குறிப்பாக சிபில் ஸ்கோர் சரிபார்த்த பின்பே கடன் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பெண்களும் தங்களின் தொழிலை விரிவுப்படுத்த கடன் பெறலாம். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையால் (DFS) இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்டாண்ட் அப் இந்தியா தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.standupmitra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.