ரூ.2000 கோடி வரை சம்பாதிக்கிற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு!மதுவிலக்கு சட்ட திருத்த மசோதானா எப்படி? அண்ணாமலை
கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார். இந்நிலையில், மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடிதத்து பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கியுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக அதிமுக அமளியில் ஈடுபட்டதுமல்லாமல் கருப்பு உடையில் வந்தனர். பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார். இந்நிலையில், மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: Seeman : நேற்று எடப்பாடி.. இன்று விஜய்.. அரசியலில் புது கணக்கு போடும் சீமான்.. கனவு பலிக்குமா?
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியின் கனிமவள கொள்ளை... வேடிக்கை பார்க்கும் மு.க.ஸ்டாலின்...: அண்ணாமலை குற்றச்சாட்டு
இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என விமர்சித்துள்ளார்.