எம்ஜிஆர் சிலையிடம் கடிதம் கொடுத்துவிட்டு அழுதவாறு கட்சியை விட்டு விலகிய பிரமுகர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுக முன்னாள் நகர கவுன்சிலரான சேகர் எம்.ஜி.ஆர். சிலையிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க கட்சியை விட்டு விலகினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் சேகர். இவர் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து பின்னர் மூன்று முறை சீர்காழி நகர மன்ற உறுப்பினராகவும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும், பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஓராண்டு நடைபயணம் - அண்ணாமலை அறிவிப்பு
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். அதிமுக அறிவித்த ஒவ்வொரு மாநாடு, பொதுக்கூட்டம் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கடினமாக உழைத்துள்ளார். ஆனால், தற்போது இவரை கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை என்றும், நடந்து முடிந்த நகர மன்றத் தேர்தலில் முறையாக உறுப்பினர்களை தேர்வு செய்யாததால் அதிக அளவில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இயலவில்லை.
கட்சியின் ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது. கட்சிக்குள் பல்வேறு குழுக்களாக செயல்படுவதால் முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுக்கின்றனர். இதனால் என்னைப் போன்ற உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பது கிடையாது. தற்போது புதிதாக பொறுப்புக்கு வரும் சிலர் பொறுப்பு கிடைத்ததும் உறுப்பினர்களை மறந்து விடுகின்றனர். இதனால் உறுப்பினர் பதவியில் இருந்து விலகலாம் என முடிவு செய்கிறேன் என்று எழுதி அந்த கடிதத்தை எம்.ஜி.ஆர். சிலையிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரபேல் வாட்ச் வாங்கியது எப்படி..? செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
மேலும் அவர் கூறுகையில், கட்சியில் இருந்து விலக மணமில்லாமல் விலகுகிறேன். எனது கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.