ரபேல் வாட்ச் வாங்கியது எப்படி..? செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
எனது சொத்து விவரங்களை வெளியிட தயாராக உள்ளேன். அதைப்போல் திமுக தலைவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தயாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் வாட்ச் பில் எங்கே.?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் வாட்ச் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். இந்தநிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணாமலை, நான் கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கைக்கடிகாரம். ரஃபேல் ஓட்ட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என தெரிவித்து இருந்தார்.
செந்தில் பாலாஜி சவால்..
மேலும் வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? ' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்திருந்தார்.
பதிலடி கொடுத்த அண்ணாமலை
இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பே ரபேல் கடிகாரத்தை வாங்கிவிட்டேன். கைக்கடிகாரம் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்தும் என்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஓராண்டு நடைபயணம் - அண்ணாமலை அறிவிப்பு
சொத்து விவரங்களை வெளியிட தயாரா.?
10 வருடங்களுக்கான எனது வங்கி பரிவர்த்தனைகள் ஒரு லட்சத்திற்கு மேலான அசையா சொத்து விவரங்கள், ஆடு, மாடு விவரங்களையும் கூட நான்வெளியிட தயாராக உள்ளேன். ஒரு பைசாவுக்கு கூடுதலாக நான் சொத்து சேர்த்ததை நிரூபித்தால் எனது சொத்து முழுவதையும் அரசிடம் வழங்க தயார். தமிழக சகோதர, சகோதரிகள் முன்னிலையில் அவர்களின் சொத்து விவரங்களை திமுக தலைவர்கள் வெளியிட தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்