தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

30 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுகதான் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இரண்டாவது இடம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ADMK is the main opposition party in Tamil Nadu: Edappadi Palaniswami responds to Annamalai sgb

தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2024ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவும் பாஜகவுக்கும் தான் போட்டி என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கும் பாஜவிற்கும்தான் போட்டி என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவர் அப்படி கூறுகிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் அவரைத்தான் கேட்கவேண்டும். யாருக்கு யார் எதிரி என்று மக்களிடம் கேளுங்கள். மக்கள் தெளிவாகச் சொல்வார்கள்" என்றார்.

பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரண்டாவது இடம் என்ற பேச்சுக்கே கிடையாது. நாங்கள்தான் எதிர்கட்சி" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

ADMK is the main opposition party in Tamil Nadu: Edappadi Palaniswami responds to Annamalai sgb

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக வி.பி. துரைசாமி கூறியதற்கு பதில் கூறிய அவர், "அது ஒருபோதும் கிடையாது. அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை அறிவித்துவிட்டது. வி.பி.துரைசாமியின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பாளி ஆகமுடியாது. தினமும் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வது?" என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மக்களவை தேர்தலில் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, பல மாநிலங்களில் உள்ள கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவே இல்லையே என்றார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

:தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வேண்டும். தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதெல்லாம்தான் எங்களுடைய பிரதான கோரிக்கைகள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரல் ஒலிக்கும்" என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Power Shutdown in Chennai: இன்னைக்கு சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios