Asianet News TamilAsianet News Tamil

பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai 44 electric trains canceled for a day ahead of maintenance work sgb
Author
First Published Oct 7, 2023, 8:32 AM IST

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரெயில்வே இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான சேவை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், தாம்பரம்-கடற்கரை இடையிலான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு-கடற்கரை இடையிலான சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையும் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11.00, 11.50, மதியம் 12.30, 12.50, 1.00, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12.00, 12.20, 1.00 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

Chennai 44 electric trains canceled for a day ahead of maintenance work sgb

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடம்

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரை 14 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மூர்மார்க்கெட்டில் இருந்து சனிக்கிழமை இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன எனவும் தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.

இதேபோல, மூர்மார்க்கெட்டில் இருந்து ஞாயிறு காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

Power Shutdown in Chennai: இன்னைக்கு சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?

Follow Us:
Download App:
  • android
  • ios