Power Shutdown in Chennai: இன்னைக்கு சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், அம்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தி.நகர்:
எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ. புரம், பட்டினப்பாக்கம், ஆர்.கே. நகர், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, காமராஜ் சாலை, கற்பகம் அவென்யூ, சாந்தோம் பிரதான சாலை, அன்னை தெரசா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மயிலாப்பூர்:
ராயப்பேட்டா பிரதான சாலை, கவுடியா மட சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
ஜே.ஜே. நகர் அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கை அம்மன் நகர் மெயின் ரோடு, சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, மில்க்டைரி ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி:
துரைநல்லூர் கவரப்பேட்டை, முதலம்பேடு, சோம்பட்டு, பண்பாக்கம், புதுவொயல், ஆரணி, தண்டலச்சேரி, மங்கலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.