டெண்டர் விடப்பட்டதில் அதிமுக ஆட்சியில் முறைகேடு... புள்ளி விவரத்தோடு குற்றச்சாட்டிய மா.சுப்ரமணியன் !!

அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். 

admk govt of malpractice in tendering says ma subramanian

அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்காக கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதில்கூட 2.18 கோடி ரூபாய் முறைகேடு என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓ... ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!!

60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நிர்வாக செயல்திறன் இல்லாததால் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்ந்தது. அதனை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே 30 ஆயிரம் கோடியாக குறைத்தது திராவிட மாடல் திமுக அரசு. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்

கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது. 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது. பள்ளி புத்தகப் பைகள் கொள்முதலில் 4.88 லட்சம் பள்ளிப் பைகள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால் அரசு நிதி 7.28 கோடி ரூபாய் முடக்கம் என கணக்கு அறிக்கைத்துறை குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios