Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓ... ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!!

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

cm stalin announced 1 crore for family of vao who was murdered in thoothukudi
Author
First Published Apr 25, 2023, 5:09 PM IST

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் செல்ல முயன்றது குறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் லூர்தர் பிரான்சிஸ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த இரண்டு பேர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் அப்போது என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்

ரத்த வெள்ளத்தில் சரிந்த லூர்தர் பிரான்சிஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீலகிரியில் பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; உறவினர் துணீகரம்

முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios