Asianet News TamilAsianet News Tamil

"உழைக்க வேண்டாம்.. குடிகாரனா இருந்தா போதும்.. இது தான் கேடு கெட்ட திராவிட மாடல்" - பீஸ்ட் மோடில் கஸ்தூரி!

Actress Kasthuri : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது குறித்து பேசியுள்ளார் பிரபல நடிகை கஸ்தூரி. 

Actress kasthuri heated tweet on 10 lakh relief announced by DMK government for kallakurichi death ans
Author
First Published Jun 21, 2024, 8:39 PM IST | Last Updated Jun 21, 2024, 8:39 PM IST

தமிழகத்தையே உலுக்கும் ஒரு நிகழ்வாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருனாபுரம் என்கின்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சில பெண்கள் உட்பட 49 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராகவும், கள்ளக்குறிச்சி பகுதியில் பணியாற்றி வந்த சில அரசு அதிகாரிகளை எதிர்த்தும், திரை துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராகவும் தொடர்ச்சியாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்; விக்கிரவாண்டி இடைதேர்தலில் களம் காணும் ஸ்ரீமதியின் தாயார்

குறிப்பாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அவர்கள் இன்று வெளியிட்ட தனது சமூக ஊடக பதிவு ஒன்றில், "கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி?" என்பது குறித்து கேள்விகளை எழுப்பி இருந்தார். அதே போல நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள், மக்களின் வரிப்பணத்தில் இருந்து, சுமார் 5 கோடி ரூபாயை இப்படி கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு கொடுக்கத்தான் வேண்டுமா? ஏன் அந்த கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்றவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதை அந்த குடும்பத்தாருக்கு கொடுக்கக் கூடாதா? என்று ஆவேசமாக கேள்விகளை எழுப்பியது அனைவரும் அறிந்ததே. 

இந்த சூழலில் பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில் "சிவகாசி, விருதுநகர் போன்ற பட்டாசு ஆலைகளில் உழைத்து குடும்பத்தை போற்ற உழைக்கும் அப்பா, அம்மாக்கள், அண்ணன், தம்பிகள், அக்கா மற்றும் தங்கைகள் வெடி விபத்து ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பலர் மரணிக்கின்றனர். அவர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்திருக்கிறது இந்த அரசு? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

அதே போல 10 லட்சம் கொடுக்கப்பட்டதே, அது விளையாட்டு வீரர்களுக்கா? அல்லது போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கா? விவசாயிக்கா? இல்லை குடும்பத்தை கைவிட்டு கள்ளச்சாராயத்தை குடித்து செத்தவருக்கா? இந்த கேடுகெட்ட திராவிட மாடலில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையாக உழைக்க தேவையில்லை.. குடிகாரனாக இருந்தால் போதும்.." என்று கடுமையாக சாடியுள்ளார்.

ரூ.1,734 கோடிப்பே.. சினிமாவை மிஞ்சிய குடிமகன்கள்.. கடந்த ஆண்டை விட அதிகரித்த டாஸ்மாக் வருமானம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios