தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 81 பேர் கடும் குற்ற பின்னணி உடையவர்கள்; தனியார் அமைப்பு தகவல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 135 பேர் குற்ற பின்னணி உடையவர்கள் 81 பேர் கடும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என பிராமண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பக உறுப்பினர் ரங்கநாதன் தகவல்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் எனும் தனியார் அமைப்பின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் உறுப்பினர் ரங்கநாதன் கூறுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் 945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டத்தில் 135 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 81 வேட்பாளர்கள் தங்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மோடியிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தால் நம்மை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்; கோவையில் சீமான் பேச்சு
ஆகையினால் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிந்த பின்பாவது இவர்கள் மீது உள்ள வழக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தார். மேலும் தமிழகத்தில் மொத்தம் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரிய அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் சராசரியாக 10 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளவர்களாக உள்ளனர். இதில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே சொத்து பின்னணி இல்லாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு துள்ளல் நடனமாடிய பொன்முடி; பெண்கள் உற்சாகம்
மேலும் 8 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.