Asianet News TamilAsianet News Tamil

நடனமாடி பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் பிரசாரத்தின் போது இசைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு நடனமாடியபடி அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

minister ponmudi did dance for vck campaign song in villupuram vel
Author
First Published Apr 10, 2024, 1:01 PM IST

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏம்ப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். 

அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர், ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம். ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும், அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். 

ரைடு அனுப்புவோம், கட்சியை உடைப்போம் என பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுத்தது - வைகைசெல்வன் குற்றச்சாட்

சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம். ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பாஜகவோடு பாமக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார் குறிப்பாக தமிழர்கள் நாம் முன்னேறுவது அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவி குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது மோதி சினிமா பாணியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்! 5 பேர் பலி! நடந்தது என்ன?

தொடர்ந்து கூட்டத்தில் இருந்த தாய்மார்கள் உடன் பேசினார். அதன் பின்னர் பிரச்சார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சார் நடனமாடினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios