Abdul kalam: தமிழகத்தில் சினிமா மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தோல்விப் படங்களை கொடுத்தாலும் சினிமாக்காரர்களுக்கு சார் பட்டம் கொடுக்கும் பழக்கம் வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் சினிமா அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சினிமாவிற்கு தனி மதிப்பும் மவுசம் உண்டு, அது எம்ஜிஆர்,ரஜினி காலத்திற்குப் பிறகு சினிமா ரசிகர்கள் என்ற நிலை மாறி சினிமா பித்தர் கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் . அதிலும் எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி -கமல், விஜய்-அஜித் என தனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத நடிகர்களின் படம் வரும்போது ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் இன்று வரலாறாக மாறிப் போய் உள்ளன.
சிவாஜியை பிடிக்காதவர்கள் எம் ஜி ஆர் பக்கமும், ரஜினியை பிடிக்காதவர்கள் கமல் பக்கமும், விஜயை பிடிக்காதவர்கள் அஜித் பக்கமும் சேர்ந்து பல கோஷ்டிகளாக உருவான வரலாறு தமிழகத்திற்கு உண்டு இன்னும் சொல்லப்போனால் குடும்பத்தை கவனிக்காமல் சினிமா பார்ப்பதற்கு செலவு செய்த நபர்களும் உண்டு, இவையெல்லாம் காலப்போக்கில் மாறி மாறி ஓரளவிற்கு தெளிவு வந்து விட்டது என்று நினைக்கும் வகையில் டெக்னாலஜி மற்றும் உலகத்தின் வளர்ச்சி அசுர நிலையை அடைந்துள்ள போதிலும் தமிழகத்தில் சினிமா மோகமும் சினிமாக்காரர்கள் மீதுள்ள மோகமும் குறைந்த பாடில்லை.
அதிலும் குறிப்பாக சினிமா பிஆர்ஓக்கள் எனப்படும் பப்ளிக் ரிலேஷன் ஆபீசர்கள் செய்யும் அட்ராசிட்டி செம காமெடி ரகம் ஆகும் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் அல்லது தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் மார்க்கெட் போன அல்லது முன்னேற்றமே அடையாத சிறு ஹீரோகள் மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்ட்டுகள் மண்டபத்திற்குள் அல்லது நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழையும்போது கொடுக்கும் பில்டப் உலக அளவில் இருக்கும் பொதுவாக சினிமா என்பது ஒரு கட்டுக்கதை அதிகமான வெளிச்சம் மற்றும் கலர் கலரான செட்டுகள் போட்டு பின்னணி இசை சேர்த்தால் மட்டுமே அது நமது மனதில்ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அஜித்,மம்முட்டி போன்ற தெளிவான நடிகர்கள் இதைத்தான் அடிக்கடி மக்களிடையே சொல்லியும் வருகிறார்கள்.
சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே அல்லது மனக்கவலைகளை மறப்பதற்கு மட்டுமே அதை முடித்த பிறகு அவரவர் அவரது வேலையை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்துவார்கள். இது எப்படி இருக்க மற்றொருபுறம் ஒரு புதிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது எவ்வளவு மோசமான தோல்வி படம் கொடுத்தாலும் கூட சுத்தமாக கற்பனை திறனற்ற டைரக்டராக இருந்தாலும் கூட அவர்களுக்கு சார் பட்டம் போட்டு அழைக்கும் பழக்கம் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் சினிமா துறை மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது எது எப்படியோ போய் தொலையட்டும் என்று ஒரு பக்கம் விட்டு விட்டால் கூட ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு மற்றொரு கண்ணுக்கு வெண்ணைய் என்ற அந்த மோசமான பாகுபாடு இந்த இடத்தில் மிகவும் சிந்திக்க வைக்கிறது.
நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தியாகிகள் வஉசி, காமராஜர், காந்தி, நேரு என அனைவர் பெயரையும் எந்த ஒரு மரியாதையும் இன்றி நாம் அழைக்கிறோம் அதேபோன்று உலக அரங்கில் நமது தமிழினத்தை தலை நிமிர வைத்த அப்துல்கலாம் போன்ற உலக தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் சுந்தர் பிச்சை போன்ற உலக அளவிலான அதிகாரிகள் சிவன் போன்ற சாட்டிலைட் விஞ்ஞானிகள் ஆகியோரை சிறுவர் முதல் பெரியவர் வரை சர்வ சாதாரணமாக பெயரை சொல்லி தான் அழைக்கிறார்கள் என்பதுதான் மிக வருத்தப்படக்கூடிய விஷயமாக பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் சில பேர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக தரம் தாழ்ந்து நடந்து கொண்டாலும் கூட சினிமா துறையில் கால் வைத்து விட்டாலே அவர்களை சார், சார் என்று பத்து முறை பட்டம் போட்டு அழைக்கும் ஒரு தவறான கலாச்சாரம் தமிழர்களிடையே வேகமாக பரவி வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயமே.
