MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay politics : விஜய்யின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன.? எப்போது ஜெயலலிதாவுடன் மோதல் உருவானது? ஏன்?

Vijay politics : விஜய்யின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன.? எப்போது ஜெயலலிதாவுடன் மோதல் உருவானது? ஏன்?

திமுக ஆட்சிக்கு எதிராக நடிகர் விஜய் அதிமுகவை கடந்த 2011 ஆம் ஆண்டு ஆதரித்தார். அப்போது அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு விஜய் தான் காரணம் என கூறப்பட்டதை ஜெயலலிதாவால் ரசிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தான் விஜய்க்கும் ஜெயலலிதாவிற்கும் இடைய மோதல் உருவானது. 

3 Min read
Author : Ajmal Khan
Published : Feb 02 2024, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய்யும் தமிழக அரசியலும்

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத உயரத்தில் இருந்து வருகிறார், இவரது வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காரணம் என்றாலும், தனது உழைப்பும் முக்கிய காரணம் என நிரூபிக்க தவறியதில்லை. நடித்து மட்டும் கொண்டிருந்த விஜய்க்கு ஒரு விதத்தில் அரசியல் ஆசையை தூண்டிவிட்டது ஜெயலலிதா என்றே சொல்லலாம்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த விஜய், அதிமுக-விற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதற்கு காரணம் காவலன் படம் ரிலீஸ் சமயத்தில் திமுக-வினர் கொடுத்த நெருக்கடி தான் என சொல்லப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அதிமுக வெற்றிக்கு விஜய் காரணமா.?

இதனையடுத்து விஜய் ரசிகர் மன்றத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் பணியும் அதிமுகவை மிகப்பெரிய வெற்றியை அடையவைத்தது. இதனையடுத்து ஜெயலலிதாவை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் கூறினார்  நடிகர் விஜய். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கியதற்கு ஒரு அணிலாக இருந்து உதவியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருந்தார்.

இதனையடுத்து பல்வேறு திரைப்பட நிகழ்வுகளின் போது அதிமுக ஆட்சிக்கு வந்ததற்கு விஜய் தான் முக்கியம் என மேடையில் பேசவும் செய்தனர். இதனை சிறிதும் ரசிக்காத ஜெயலலிதா விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏசிக்கு எதிராக தனது அரசியலை வெளிக்கொண்டார். 

மக்களவை தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை - த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்!

37

டைம் டூ லீட்- கோவத்தில் ஜெயலலிதா

இதனை தொடர்ந்து அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்தபோது, ' டைம் டூ லீட்' என்கிற டேக் லைனுடன் 'தலைவா' பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது. இது மட்டுமில்லாமல் தலைவா படத்தில் விஜயை அரசியலுக்கு அழைக்கும் படி வசனமும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக படத்தை வெளியிடமுடியாத படி தடை போட்டனர். இதற்கு சமாதானம் பேச கோடாநாட்டில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் சென்றார். ஆனால் விஜய்க்கு அனுமதி கொடுக்காமல் ஜெயலலிதா திருப்பி அனுப்பினார்.

47

விஜய்யை பார்க்க மறுத்த ஜெயலலிதா

இதன் பிறகு ஜெயலலிதாவை சமாதானம் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இறுதியாக பல நாட்கள் கழித்து 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. கத்தி படம் வரையில் யோசித்து அரசியல் வசனங்களை பேசி வந்த விஜய், கத்தி படத்திற்கு பின்னர் நேரடியாகவே அரசியல் பேசத் தொடங்கினார். அடுத்ததாக மெர்சல் படத்தில்  ஜிஎஸ்டி வரி குறித்த விஜய் பேசிய வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் பல  காட்சிகளை நீக்கச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 

57
Thuppakki

Thuppakki

நாட்டின் அரசியை வீழ்த்தும் விஜய்

இதே போல துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதி போல் காட்சி உருவாக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக உருவானது. அடுத்ததாக புலி படத்தில் ஒரு நாட்டின் அரசியை வீழ்த்துவது போல் படம் அமைக்கப்பட்டது இதுவும் ஜெயலலிதாவை குறி வைத்தே படம் எடுக்கப்பட்டதாக கூறி  எதிர்ப்பு கிளம்பியது. 
 

67

வில்லிக்கு கோமளவல்லி பெயர்

அடுத்ததாக சர்க்கார் படம் மிகப்பெரிய அளவில் அதிமுக- விஜய் இடையே மோதலை ஏற்படுத்தியது. இந்த படத்தில்  வில்லியாக நடித்த வரலட்சுமி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயரான கோமளவல்லி என பெயரிட்டு இருந்ததோடு மட்டுமின்றி அந்த படத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தரையில் போட்டு உடைப்பது போன்றும் இதற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்ட்டதையடுத்து நாயகியின் பெயரும், அந்த காட்சியும் துண்டிக்கப்பட்டது.  

77

அரசியலில் சாதிப்பாரா விஜய்

திரைத்துறையில் நடிகராக விஜய் அறிமுகமாக சுமார் 32 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது நேரடி அரசியலுக்கு விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சினிமாத்துறையில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் சாதித்தது என்பது ஒரு சிலர் மட்டுமே, எனவே விஜயின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

பெயரில் திராவிடம் இல்லாததே பெரிய மாறுதல்தான்... விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து சீமான் சொன்னதென்ன?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved