- Home
- Gallery
- Indian Cinema : "சூர்யாவுடன் மோதும் ஆலியா.. ஆண்டவருடன் மோதும் அக்ஷய்" - 2024ஐ அதிரவிடும் கோலிவுட் Vs பாலிவுட்!
Indian Cinema : "சூர்யாவுடன் மோதும் ஆலியா.. ஆண்டவருடன் மோதும் அக்ஷய்" - 2024ஐ அதிரவிடும் கோலிவுட் Vs பாலிவுட்!
Kollywood Vs Bollywood : இந்த 2024ம் ஆண்டின் முதல் பாதி கடந்துவிட்ட நிலையில், எதிர்வரும் இரண்டாம் பாதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாகவுள்ளது.

Indian cinema
இந்த வருட துவக்கத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும், தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் வெளியாகும் திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறி வருகின்றது. அது மட்டுமல்லாமல் இவ்வாண்டு வெளிவரவருக்கும் சில திரைப்படங்கள் சொல்லி அடிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Kanguva
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படத்தோடு நேருக்கு நேர் மோதும் சூர்யாவின் கங்குவா திரைப்படம், பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள "ஜிப்ரா" என்ற திரைப்படத்துடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் ஒரு சகோதரியாக இந்த "ஜிப்ரா" திரைப்படத்தில் ஆலியா பட் நடித்திருக்கிறார்.
Indian 2
அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் சங்கர் இயக்கத்தில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து வெளியாகும் "இந்தியன் 2" திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் சூர்யா நடிப்பில் வெளிவந்த "சூரரை போற்று" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படமான "ஸர்ஃபிரா" திரைப்படம் வெளியாக உள்ளது, இதில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.